Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛குட் பேட் அக்லி' : அஜித் 63 பட தலைப்பு அறிவிப்பு

14 மார், 2024 - 18:46 IST
எழுத்தின் அளவு:
Good-Bad-Ugly-:-Ajith-63-Movie-Title-Announcement

நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக த்ரிஷா நடிக்க, முக்கிய வேடங்களில் அர்ஜூன், ஆரவ் நடிக்கின்றனர். ஆக் ஷன் கதைக் களத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது.

இந்த படத்திற்கு அடுத்தப்படியாக அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாகவும், தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

படத்திற்கு ‛குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். போஸ்டரில் முள் வேலி, துப்பாக்கி போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இதை பார்க்கையில் இந்தபடமும் ஆக் ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என தெரிகிறது. அடுத்தாண்டு பொங்கல் வெளியீடு என இப்போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் காதுக்கு கீழே சிறிய ஆபரேஷன் செய்து கொண்ட அஜித் ஓய்வில் உள்ளார். ‛விடாமுயற்சி' படத்திற்காக மீண்டும் அஜர்பைஜான் பறக்க உள்ளார். ‛விடாமுயற்சி' படத்தை முடித்ததும் ‛குட் பேட் அக்லி' படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள உள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஜப்பானில் ஒரு நிமிடத்தில் விற்று தீர்ந்த ‛ஆர்ஆர்ஆர்' டிக்கெட்ஜப்பானில் ஒரு நிமிடத்தில் விற்று ... விஜய் ஸ்டைலில் ஆங்கிலப் பெயருக்குத் தாவிய அஜித் விஜய் ஸ்டைலில் ஆங்கிலப் பெயருக்குத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

vbs manian - hyderabad,இந்தியா
15 மார், 2024 - 08:49 Report Abuse
vbs manian ஏற்கனவே ஒரு ஹாலிவுட் இந்த தலைப்பில் உள்ளது.
Rate this:
Krishnakum - Chennai,இந்தியா
15 மார், 2024 - 08:04 Report Abuse
Krishnakum தமிழ் பெயரே இல்லையா?
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15 மார், 2024 - 06:20 Report Abuse
Mani . V கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறவேண்டும் என்று சொல்வது மாதிரி, இந்த கருமம் பிடித்த சினிமாக்களின் தலைப்பும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாதா? எது அரச குடும்பத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே தமிழில் இல்லையா?
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
15 மார், 2024 - 04:40 Report Abuse
chennai sivakumar Metro goldwyn Meyer (MGM) Hollywood நிறுவனம் அனுமதி பெறாமல் தலைப்பு வைத்து இருந்தால் கேசு போட்டு விடுவான்.
Rate this:
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
15 மார், 2024 - 01:34 Report Abuse
thonipuramVijay வெரி அக்லீ
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in